துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி சிதைந்தும் திரிந்தும் துளு மொழியானது – மயிலை சீனி. வேங்கடசாமி
துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி சிதைந்தும் திரிந்தும் துளு மொழியானது கன்னட நாடு, ஆந்திர நாடு, மலையாள நாடுகளைப் போலவே துளு நாடும் திராவிட நாட்டைச் சேர்ந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளைப் போலவே துளு மொழியும் திராவிட இன மொழியாகும். அசோகப் பேரரசரின் சாசனங்களிலே கூறப்படுகிற சத்தியபுத்திர நாடு என்பது துளுநாடே என்பதை முன்னமே கூறி யுள்ளோம். சங்கக் காலத்திலே துளு நாட்டில் வழங்கி வந்த மொழி தமிழ் என்பதையும் துளு நாட்டு அரசர் தமிழ்ப் புலவரை…