இயற்கை வேளாண் கருத்தரங்கம், பாலையூர், குத்தாலம்
தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் திரு. அ.அம்பலவாணன் தலைமையில் நம்மாழ்வார் அவர்களின் 78 ஆவது பிறந்த நாள் விழா பங்குனி 24, 2047 / 06.04.2016 புதன் கிழமை காலை 9.30 மணியளவில் குத்தாலம் வட்டத்தில் உள்ள பாலையுரில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் இயற்கை வேளாண்மை குறித்தும் நம்மாழ்வாருடைய கொள்கை – திட்டங்களை எடுத்துச் செல்வது குறித்தும் ஒரு விழாவாக நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் நம்மாழ்வார் அவர்களோடு பல ஆண்டு காலம் பணி செய்த முன்னோடிகளும்…
மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டம் : போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை
மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டத்துக்குத் தமிழக அரசு துணைபோனால் போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை “பாறை எரிவளித் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டும் மத்திய அரசுக்குத் தமிழக அரசு துணைபோனால், சோழ மண்டல உழவர்களும், பொதுமக்களும் பெரும் சீற்றத்துக்கு ஆளாகி, கிளர்ந்து எழுந்து பெரும் போராட்டத்தை நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள்” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய…
நம்மாழ்வார் – திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்
சேற்று வயலில் செம்மண் நிலத்தில் ஆற்றில் காட்டில் அணையில் மலையில் காற்றில் தோய்ந்து களமதில் காய்ந்து மாற்றம் வேண்டி மனம்மிக ஒன்றி ஊரினை நாட்டினை உழைக்கும் உழவரை பாரினை பண்டைய வாழ்வினைக் காக்க ஏரினைத் துவக்காய் எடுத்த பெரியோய்! ஆளும் அரசுகள் செய்யும் அழிம்புகள் நாளும் உழவரை நாச மாக்கிடும் கேட்டினைத் தடுக்க கீழ்த்திசை வானில் மூட்டிய நெருப்பாய் முகிழ்த்த கதிரே! உடையில் உணர்வில் உரிமை மீட்பில் தடைகள் தகர்த்திடும் தன்னல மறுப்பில் நடையால் நானிலம் நிமிர்த்தும் உழைப்பில் திண்மை நெஞ்சில் திறனில் நீயெம்…