நம் மொழியில் பாடினால்தான் கடவுளுக்கும் காது கேட்கும்! – இராசாசி
நம் மொழியில் பாடினால்தான் கடவுளுக்கும் காது கேட்கும்! மனிதன் மொழிகளுடன் சேர்த்து இசையைக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சி உண்டாகிறது. மனிதக் குரல் சேர்ந்தவுடன் என்ன சொல்லுகிறார் என்று கூடவே மனம் கேட்கிறது. இசை மனத்தில் ஏறுவதுடன், என்ன சொல்லுகிறார் என்பதும் கூட ஏறுகிறது. இசையில் மொழிகள் வரும்போது அவை பொருளற்றதாய் வேறு ஏதோ ஒலியாய், முரசின் ஒலியாய், தம்பட்டையின் ஒலியாய் இருப்பதற்கு மாற்றாக, இசையின் சுவைக்கு இணைந்ததாக, நமக்கும் விளங்கும் மொழியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். நம் மொழியில் பாடினால்தான் நம்…