5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்! அ.இ.ம.அ.நி.(அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவம்) மருத்துவமனை (AIIMS) தமிழ்நாட்டில் 200 காணி பரப்பில் 2000 கோடி உரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2015 இல் தெரிவத்தது. தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம்), புதுக்கோட்டை, செங்கிப்பட்டி(தஞ்சாவூர் மாவட்டம்), பெருந்துறை(ஈரோடு மாவட்டம்), தோப்பூர் (மதுரை மாவட்டம்) ஆகிய 5 இடங்களைப் பரிந்துரைத்தது. இந்திய ஒன்றியத்தின் நல்வாழ்வு குடும்பநலத்துறை இணைச்செயலர் தத்திரி பண்டா (Dharitri Panda) தலைமையிலான குழு…
இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்? இந்திய விடுதலைக்கு முன்னரே இந்தித்திணிப்பிற்குக் கால் கோளிடப்பட்டது. அதன் ஒரு பகுதிதான் இந்திப்பரப்புரை அவை(இந்திப்பிரச்சாரசபா). இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இந்தித்திணிப்பு என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பேராயக்கட்சியால்(காங்கிரசால்) செயல்படுத்தப்பட்டது. இன்றைய நரேந்திரர்(மோடி) ஆட்சியில் வெகு விரைவாக இந்தித்திணிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் நல மையங்கள் அல்லது ஊழியப் பகுதியில் பொதுவாக இந்தி அல்லது ஆங்கிலம் உள்ளது; குசராத்தி மொழி மிக விரைவாக எல்லா மத்திய அரசு, அரசு சார் நிறுவனங்களில்…
ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு
ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு “இராசீவுகாந்திக் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் எழுவர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு” என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராசீவுகாந்திக் கொலை வழக்கில், செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு நடுவண் உள்துறைச்…
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!
தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்! தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர். நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன்…
இரசினி குழுவினரின் சிறந்த நடிப்பு!
இரசினிகாந்து தன் ஒப்பனைத் தோற்றத்தை நம்பாமல் தன் நடிப்பு முறையை நம்பும் தன்னம்பிக்கை உள்ளவர். ஆனால், இப்பொழுது அவருக்குத் தன்னம்பிக்கை குறைந்துவிட்டது போலும்! திரைக்கு வெளியேயும் தன் குழுவினருடன் சேர்ந்து நடித்து வருகிறார். இரசினி நடிக்கும் (இ)லிங்கா என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் கருநாடகா மாநிலத்தில் நடைபெற்றது. கத்தூரி கருநாடக சனபர வேதிகே என்னும் அமைப்பின் சார்பில் இராம்நகரில் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரது உருவப் பொம்மையை எதிர்த்தனர். ஏனெனில் அவர் காவிரியாற்றுச்சிக்கலில் தமிழர் பக்கம் உள்ளாராம். கேழ்வரகில் நெய்வடிகின்றது என்றால்…
மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக
சூன் 3 ஆம் நாள் இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும். மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…
நரேந்திரரே! வியவற்க உம்மை! நயவற்க எம் பகையை!
மக்கள் தொகை அடிப்படையில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான். அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் உண்டு என்பது அவரே அறிந்ததுதான். ஒரு முகம் மக்களை ஈர்க்கும் முகம்! மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம்! வெறுக்கப்படும் முகத்தை ஈர்க்கும் முகமாக மாற்றாமல் ஒரு…