தமிழர் பண்பாடு –– சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 19 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 20 10. பண்பாடு நல்லாட்சியின்கீழ்க் கல்வி முதலியன பெற்று இல்லற வாழ்வில் சிறந்து கடவுளுணர்வுடையராய் மெய்யுணர்ந்த மக்கள் பண்பாட்டில் உயர்ந்தோராய் இருந்திருப்பர் என்பதில் ஐயமின்று. ‘பண்புடைமை’யே மக்களை மாக்களினின்றும் பிரித்து உயர்த்துவதாகும். பண்படுத்தப்படும் வயல் நல்ல விளையுளைத் தருதல் போன்று பண்படுத்தப்படும் உள்ளமும் உலகிற்கு உயர் பயனை நல்கும். பண்புடையாளரால்தாம் உலகம் வாழ்கின்றது என்று திருவள்ளுவர் தெளிவுறக் கூறியுள்ளார். “பண்புடையார்ப் பட்டுண் டுலகம்;…