நூற்றாண்டு விழா நாயகர் பேரா. சி. இலக்குவனார் – நவீன்குமார்
நூற்றாண்டு விழா நாயகர் தமிழறிஞர் முனைவர் பேரா. சி. இலக்குவனார் ‘’தமிழில்லா வீட்டுக்கு நான் போக மாட்டேன்’’ என்பார் அறிவியக்கக் கவிஞர் சாலை இளந் திரையன். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாரதி பாடினான். தமிழைத் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினான். இப்படிப் பல்வகைச் செல்வமும் எழில் நலமும் படைத்த செம்மொழியான தமிழ், எண்ணற்ற இன்சுவை இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்புடைய சிறப்பும் பெற்று. உலகிலேயே முதல் கழகம் கண்ட பெருமையைக் கொண்டிலங்குகிறது. இத்தகைய தமிழை வளர்க்க, உய்விக்க தனது வாழ்நாளை…