நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்
பெட்டகம் நமது தேவை நவோதயா பள்ளி அல்ல! தாய்த்தமிழ்ப்பள்ளிகளே! . இந்தியா என்பது இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ இயற்கையாய் அமைந்த நாடன்று. அயலவர் ஆட்சி நலனுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை அரசமைப்பு. இந்த அமைப்பு அனைத்துத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகச் செயல்பட்டால் வலிவும் பொலிவும் மிக்கதாக விளங்கும். மாறாக ஒரே மொழி ஒரே நாடு என்ற அடிப்படையில் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டால் சிதைவுண்டு போகும் ஆனால் இந்தியாவிற்கு அமைந்த நலக்கேடு என்னவெனில் மத்திய அரசு எப்பொழுதும் நாட்டு ஒற்றுமையைப் பேசிக் கொண்டே…
நவோதயா வேண்டாம்! நாம் என்ன செய்ய வேண்டும்? – நக்கீரன் செவ்விகள்
நவோதயா வேண்டாம்! நாம் என்ன செய்ய வேண்டும்? “தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை மாவட்டம்தோறும் தொடங்கத் தடையில்லாச் சான்றிதழையும் 30 காணி (ஏக்கர்) நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கித் தர வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிரடி ஆணை அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் போன்றோரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’யின் தலைவர் வேல்முருகன் அவர்கள், “முதலில் மருத்துவ நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவம் முதலான உயர்கல்வியைத் தமிழர்களுக்கு மறுக்கும் சூழ்ச்சி எனில், நவோதயாப் பள்ளிகளோ அடிப்படைப்…