திட்டச்சேரியில் தில்லு முல்லு தேர்தல் – கமுக்க முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுப்பு

பள்ளிவாசல் தோறும் தேர்தல் முறைகேடுகள்! பொதுச்சொத்து கொள்ளை!     நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் கி.பி.1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் 1923 வக்பு நிருவாகச் சபையாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் அப்பள்ளிவாசலில் உள்ள சொத்துக்களைப் பேணவும் பள்ளிவாசலில் உள்ள ஊழியர்களுக்குச் சம்பளம், பிற செலவிற்காக வக்பு சொத்துக்களில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.   இவ்வாறு தொடங்கப்பட்ட குழுவிற்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் இரண்டு பிரிவினர்களாகச் செயல்பட்டுத்…

வரன்கொடை கொடுமைக்கு முடிவே இல்லையா?

திருமணங்கள் நரகத்தில் முடிவாகின்றன! மகளிர் நாளில் திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை   திருமணங்கள்   உம்பர் உலகில்(சொர்க்கத்தில்) உறுதிசெய்யப்படுகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. சில பெண்கள் திருமணத்தால் நரகவேதனைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இன்றைய வழக்கம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண்களைத் திருமணம் முடிப்பதும் அதன் பின்னர் அப்பெண்ணிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மணவிலக்கு அளிப்பதும் வாழையடி வாழையாக இருந்துவருகிறது.   வரன்கொடை(வரதட்சணை) கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமை ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டாலும் ஏன் என்று கேள்விகேட்டால் திருமண விலக்கு அதாவது விவாகரத்து உடனடியாக வழங்கி…

என்று மடியும் இந்தக் கையூட்டு வேட்கை? – வைகை அனிசு

ஊழலின் கோரப்பிடியில் அரசு அலுவலகங்கள்  “பருப்பு இல்லாமல் சாம்பாரும் இல்லை. ஊழல் இல்லாத அரசுத்துறை அலுலவகங்களும் இல்லை” என்பது புதுமொழியாகக்கொண்டு ஊழலின் பிடியில் அலுவலகங்கள் சிக்கித்தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களோ ‘லோ,லோ’ என அலையும் நிலையில் உள்ளனர். இவற்றை எல்லாம் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவற்றில் அதிகமாக முன்னிலை வகிப்பது   வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தரகர்களின் பிடியில் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம்  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மனைவணிகம் கொடிகட்டிப்பறக்கிறது….

திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீசு வங்கிப் பணியால் பொதுமக்கள் அவதி

திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீசு வங்கிப் பணியால் பொதுமக்கள் அவதி நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் இந்தியன் ஓவர்சீசு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நாள்தோறும் பல கோடி மதிப்பில் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் மலேசியா, சிங்கப்பூர், துபாய், குவைத்து, அமெரிக்கா, ஆங்காங் போன்ற நாடுகளில் வணிகத்திற்காகவும் பணிக்காகவும் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் இந்த வங்கியை நாடித் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்தல், காசோலை மாற்றுதல், வரைவோலை எடுத்தல் எனப் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் ஓவர்சீசு வங்கியில் அவ்வப்பொழுது கணிணி…

ஆட்சியருக்குப் பாதி-மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியருக்குப் பாதி!!!??? மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!   நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறும் சம்பந்தம் என்பவர் 94981-65053 என்ற அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு  இடர்ப்பாட்டில் உள்ளவர்களைக் கண்டறிந்து உரூ.2 இலட்சம் வாங்குவதும், தரமறுப்பவர்களை மிரட்டுவதும் என மோசடி செய்து வாழ்ந்து வருகிறார்.   நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையங்களில் மணக்கொடை(வரதட்சணை) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 5 அல்லது 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் 2 அல்லது 3…

தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பரவும் கண்டம்

தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பரவும் கண்டம்      நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சி.   இந்த ஊராட்சி அருகில் கிறித்தவர்களின் தூய இடமாகக் கருதப்படும் வேளாங்கண்ணி உள்ளது.   தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் ஏறத்தாழ 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் அடிப்படைச் சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி, மின்விளக்கு என்ற எதுவும் செய்து தரப்படவில்லை.   இங்கு ஊராட்சித்தலைவராக இருப்பவர் திருவளர்செல்வி. இவருடைய கணவர்தான் ஊராட்சிமன்றத் தலைவராக செயல்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்….

குளத்தைத் தேடும் ஊராட்சிமக்கள் – வைகை அனிசு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குளத்தைத் தேடும் ஊராட்சிமக்கள்   நாகப்பட்டினம் மாவட்டத்தில் குளத்தைக்காணோம் என முறையீடு கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.   வடிவேல் ஒரு திரைப்படத்தில் குளத்தைக்காணோம் என்ற முறையீட்டை அளித்துக் காவலர்கள் வந்து குளத்தைத்தேடித் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள். அது போலத் தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சி மக்கள் குளத்தைக்காணோம் என முதல்வர் பிரிவிற்கும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மனுக்கள் அனுப்பி உள்ளனர்.   அந்த ஊர் பொதுமக்களிடம் பேசியபோது கடந்த மார்கழி 27, திருவள்ளுவர் ஆண்டு 1948 / 10.01.1917இல் தெற்குப் பொய்கை…