செந்நெற்பொங்கல் எங்கும் நிறைகவே! – நாக.இளங்கோவன்
போற்றிவளர்த்த பெருமரங்களின் கிளைகளிலே தேனடையால் வீடுகட்டிக் கூடிவாழுந் தேனீக்கள் குடைக்கூலியென சிந்திவிடுந் தேனொழுக, ஒழுகுகின்ற தேனோடு போட்டியிட்டு, பழமரமும் தன்கனியை தான்பிழிய, தேனோடு தீங்கனிச்சாறும் ஒட்டி வெட்டி சொட்டி அங்கே கட்டி தரும் கரும்பு வயலுக்கு வாய்க்காலாய் ஓடிவிழ, கருப்ப வயலின் அண்டையிலே, தடஞ்சாலி நெல்லெங்கும் தளதளவென வளர்ந்திருக்க, அதைத்தடுக்கும் களையதனைக் களைந்தெடுக்கும் நீலவிழி நங்கையரின் கைச்சினத்தை கண்டஞ்சி, சாலிநெல்லுக்குக் களையாக வளர்ந்திருந்த குவளை மலர்களெல்லாம் ஓடி, அண்டைக்குளத்திற்குள் ஒளிந்திருந்தாலும், புணர்ச்சியின் உச்சத்தில் சிவந்திருக்கும் கண்கள்போலச் சிவந்திருந்த அந்த மலர்களின் அழகில்…
சங்கத்தமிழ் தந்தால் சந்தப்பா தருவேன் – ஔவையார்: நாக.இளங்கோவன்
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா.” பிள்ளையாரின் அடியாரான ஒளைவையார் ஆக்கிய இந்தப்பாடலை தமிழ்படித்த, பேசுகின்ற எவரும் ஏதோவொரு வழியில் படித்தோ பேசியோ பாடியோ இருப்பார்கள். தமிழ்நாட்டில் அத்தனைப் புகழ்பெற்றது இந்தப்பாடல். தமிழ்வழிபாடுகளில் இடம்பெறும் பாடல்களில் முக்கியமான பாடல் இதுவென்றால் மிகையன்று. அழகும், வெற்றியும் அணிசெய்கின்ற கரிமுகத்தானிடம் ஔவையார் மூன்றுதமிழை கேட்கிறார், நாலுபொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம் விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச் சொல்லி படையலிட்டு…
குறியேற்றத்தின் மூலம் தமிழுக்குக் கேடுசெய்வோருக்கு நாக.இளங்கோவன் கண்டனம்!
கணித்தமிழ் ஆர்வலரின் செவ்வி! தமிழார்வம் மிக்க கணிப்பொறியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாக.இளங்கோவன். கால்நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கணிணி வல்லுநராகப் பணியாற்றுபவர். 1995 முதல் தமிழ் இணையத்தில் கருத்து செலுத்தி வருபவர். 2009-ல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகள் நடைபெற்ற பொழுது பொங்கி எழுந்தவர்களுள் இவரும் ஒருவர். நடக்க இருந்த தமிழ்ச் சிதைப்பைக் கட்டுரை மூலமாக மட்டுமல்லாமல் தமிழ் எழுத்துக் காப்பியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டு அதன் எதிர்ப்புப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஒருங்குகுறியில் 2010 இல் நிகழ…
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-3 : நாக.இளங்கோவன்
(ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி) முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட வடிவமாற்ற முன்வைப்பொன்றில், ஆய்தக்குறிக்கு மாற்றாக யாருக்கேனும் விருப்பமும் கணிப்பற்றும் இருந்தால் கணியில் இருக்கும் அடைப்புக் குறியையோ விடுகுறி(caret)யையோ அலைக்குறி(tilde)யையோ போடலாம் என்று உகர ஊகாரத் துணைக்குறியீடாக அடைப்புக் குறியை அந்தக் கட்டுரையாளர் போட்டுவிட்டிருந்தது அவரின் சீர்திருத்த முன்வைப்பின் உச்சம் எனலாம். பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும் எழுத்துகளிற்குப் பல்வேறு வேடங் கட்டிபிரித்து, நெளித்து, வெட்டி எழுதிய எழுத்து வடிவங்களைப் பார்த்தோமல்லவா? இதோ இன்னொரு போட்டியாளர் தனது எழுத்துவடிவ…
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-2 : நாக.இளங்கோவன்
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! பகுதி-2 : நாக.இளங்கோவன் (ஐப்பசி 2, 2045 / அக்.09, 2014 தொடர்ச்சி) வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால், காலஞ்சென்ற முனைவர் கொடுமுடி சண்முகனார்ஒரு குறியீட்டை உகர ஊகார வரிசைகட்குச்சூட்டி விடுகிறார். இது வடமொழி அடியொற்றியது. மேற்கண்ட செய்யுளில் உள்ளது போல உகர ஊகாரஉயிர்மெய் எழுத்துகளை மாற்றி விட்டால்கணிக்கு ஏற்றதுபோலத் தமிழை மாற்றிவிடலாம்என்று பரிந்துரைக்கிறார் கொடுமுடியார். கணிக்குஎன்ன குறை அல்லது கணியில் தமிழுக்கு என்ன குறைஎன்பதை மட்டும் வசதியாக எல்லோரும் தவிர்த்துவிடுவது வியப்புக்களில் ஒன்று….
குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-1
இன்றைக்கு இருக்கின்ற247தமிழ் எழுத்துகளில்239எழுத்துகளை மாற்றுவதற்கு நடக்கும்பல்வேறு முயற்சிகளின் தொகுப்பு இக்கட்டுரை(தொடர்). தமிழ் எழுத்து வடிவங்களை எப்படியாவது மாற்றிஉருக்குலைத்து விடவேண்டும் என்ற உறுதிதமிழர்களிடையே தென்படுகிறது. தமிழுக்குப் பகைதமிழரே என்ற உண்மையை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது இந்தச் சீர்திருத்த முயற்சிகள். தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசைத் தொழில்கள்உண்டு.தீப்பெட்டிக்குப் பெயர் ஒட்டும் தொழில், தீக்குச்சிக்கு எரிமருந்து வைக்கும் தொழில், இலைச்சுருட்டு(பீடி) சுற்றும் தொழில், பேரீச்சம்பழத்தை எடை போட்டுபொட்டலம் போடும் தொழில் என்று பலவுண்டு. தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் இத்தொழில் போன்றுஉயிரெழுத்து மாற்றத் தொழில், உயிர்மெய்கள்மாற்றத் தொழில், தமிழெழுத்து எண்ணிக்கைகுறைப்புத் தொழில் போன்று பல்வேறு…