ஈழத்து நாடக இலக்கியம் தொடர்ச்சி – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 18 நாடக இலக்கியம் தொடர்ச்சி 4 ஈழத்துக் கவிதை நாடகங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். கவிதை நாடகம் என்ற பதப்பிரயோகம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் கவிதை நாடகத்தைக் கவிதை வகைகளுள் ஒன்றாகக் கருதுவர். செய்யுள் நடையில் அமைந்துள்ளமையாலேயே இவ்வாறு கருகின்றனர் போலும். இதனால் கவிதை, நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள்பற்றிக் கருத்துக் குழப்பம் ஏற்பட வழியுண்டு. செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் இவை நாடகங்களே. இவற்றைச் செய்யுள் நாடகம் அல்லது பாநாடகம் என்று…
ஈழத்து நாடக இலக்கியம் தொடர்ச்சி – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 17 நாடக இலக்கியம் தொடர்ச்சி இயற்பண்பு சார்ந்த நாடக நெறி பேராசிாியர் கணபதிப்பிள்ளைக்குப் பின் இரு கிளைப்பட்டு வளர்ந்தது. ஒரு பிாிவினர் பேராசிாியர் கையாண்ட யாழ்ப்பாணத் தமிழை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை, கிண்டல் நாடகங்களைத் தயாாித்தனர். நூலுருவம் பெற்ற அசட்டு மாப்பிளை இதற்கு உதாரணமாகும். இது தவிர புரோக்கர் கந்தையா, பார்வதி பரமசிவன், கலாட்டா காதல், ஆச்சிக்குச் சொல்லாதே, இலண்டன் கந்தையா, புளுகர் பொன்னையா ஆகியவையும் இத்தகைய நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகும். வரலாற்று, சமய, இதிகாச,…
ஈழத்து நாடக இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 16 நாடக இலக்கியம் தொடர்ச்சி 2 ஆங்கிலக் கல்வி சிருட்டித்துவிட்ட மத்தியதர வருக்கத்தின் ஒரு பிாிவினர் மேனாட்டு மொழிபெயர்ப்பு நாடகங்களையும் புராண இதிகாசக் கதைகளையும் கையாண்டு நாடகத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாகக் கொள்ள இன்னொரு பிாிவினர் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் மண்வளம் ததும்பிய சமூகநாடகங்களை நாடக உலகுக்கு அளித்தனர். இவர்களே ஈழத் தமிழ் நாடக உலகில் இயற் பண்பு வாய்ந்த நாடக நெறி ஒன்றினை உருவாக்கினர். இவர்கள் கையில் நாடகம் வெறும் பொழுதுபோக்குச்…
ஈழத்து நாடக இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 15 6. நாடகம் ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிாிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகங்களும் நவீன நாடகங்களாகும். மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஈழத்தில் நாடக…
குவிகம் அளவளாவல் : 14.02.2021
திறமையால் உயரமான பன்மொழி நடிகர் கிங்காங்கு
திறமையால் உயரமான பன்மொழி நடிகர் கிங்காங்கு ?] வணக்கம் கிங்காங்கு அவர்களே! முதலில் உங்கள் அப்பா – அம்மா பெயர், எப்படிப் படித்தீர்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களைக் கூறுங்களேன்! என்னுடைய சொந்தப் பெயர் சங்கர். சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பக்கத்தில் உள்ள வரதராசபுரம் எனும் சிற்றூர். என் அப்பா பெயர் ஏழுமலை. அம்மா பெயர் காசியம்மாள். என் உடன்பிறந்தவர்கள் அக்கா ஒருவர், தங்கைகள் மூன்று பேர். அக்கா பெயர் மகாதேவி, தங்கை பெயர் தேன்மொழி. இன்னொரு…
‘நான் அறிந்த சுசாதா’ – கலந்துரையாடல்,சென்னை
வைகாசி 08, 2047 – 21 மே 2016, சனிக்கிழமை, மாலை – 6.30 மணி பனுவலின் பதின்மூன்றாம் நிகழ்வு ‘நான் அறிந்த சுசாதா’ முன்னிலை: சுசாதா தேசிகன் செயராமன் இரகுநாதன் கலந்துரையாடல் : வருகை தருவோர் தங்கள் வாசிப்புணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும் சுசாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும் இம்மாதக் கதை, கவிதை வாசிப்பும் வழக்கம் போல் நிகழும்! பனுவல் புத்தக நிலையம், எண்….
இயல், இசை, நாடக விளக்கம் – க.வெள்ளைவாரணன்
இயல், இசை, நாடகம் அறிவீர்! உள்ளத்தால் பொருளியல்பை உணர்த்தும் மொழி இயல் என்பர் வெள்ளத்தால் எவ்வுயிரும் மகிழ்ந்திசைய ஓசைகளும் விளங்க இன்பம் கொள்ளச்செய் உரைத்தி றத்தாற் குலவுமொழி இசையென்பர்; குறித்த செய்கை விள்ளத்தால் அதுவாகப் பயிற்றுமொழி நாடகமா விரிப்ப ராலோ வெள்ளை வாரணனார்: யாழ்நூல் சிறப்புப் பாயிரம்
மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது!
மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது! மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து, இலாங்லெட்டு ஆகியோரை இலங்கைக் கடற்படையினர், போதை பொருள் கடத்தியதாகப் பொய் வழக்கு தொடுக்கப்பட்டு த் தூக்குத் தண்டினை விதிக்கப்பட்டனர். குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல் தூக்குத் தண்டனை நாடகமும் நிறைவேற்றிவிட்டு விடுதலை யும் செய்யும் புதிய நாடகம் அரங்கேறியுள்ளது. ஏறத்தாழ அனைவருமே இதை அறிந்திருக்கின்றனர். ஆனால் விசயகாந்த்து மட்டும் மாற்றுக் கருத்தைக் கூறியுள்ளார். தம்பிதுரை, இலங்கை அரசு நடத்திய நாடகத்திற்கு, இந்திய அரசும் துணை போய் உள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டை…
ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு
“தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?” “கொஞ்சம் பொறுங்கள் அம்மா!” “என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா? அப்பாவும் நானும், முன்பே எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!” “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?” (அப்பா, வந்துகொண்டே) “சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!” “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!” “என்ன வரவில்லையா? நீதானே…
கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்!
கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்! நல்ல முடிவெடுங்கள்! என அன்புடன் வேண்டுகின்றோம்! உங்கள் கடந்த கால அருவினைகளையும் படைப்புத்திறனையும் குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றால் ஈர்க்கப்பட்டதால் உங்களைப்பற்றிய மதிப்பான படிமம் உள்ளத்தில் ஏற்பட்டதால்தான் இப்பொழுது இவ்வாறு கூற நேர்கிறது! உங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளீர்கள்! ஒருவேளை அவர்களுக்கிடையே உள்ள மோதலால் ஒருவருக்கு ஒருவர் தீங்கு நேரிடும் என அஞ்சி நீங்கள் கேட்டுள்ளீர்களோ என்றும் தொண்டர்களை எண்ண வைத்தது இது. தமிழக அரிசடம் கேட்காமல மத்திய…