இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07 மக்களுக்கும் மன்னருக்கும் நாட்டுப்பற்று என்பது கருவிலே வாய்ந்த திருவாக இலங்கியது. மக்கள் அனைவரும் அவரவர் கடமையை நன்கு ஆற்றி நாட்டைப் புரத்தலே அவர் தம் தலையாய பணியெனக் கருதினர். குழந்தைகளைப் பெற்று நன்கு வளர்த்தலே தன் கடமையென அன்னை எண்ணினாள். எல்லா நற்குணங்களாலும் நிறைந்த பெரியோராக்குதல் தன் கடன் எனத் தந்தை நினைத்தான். படைக்கலன்களைப் படைத்துக் கொடுத்தல் தன் பங்கு எனக் கொல்லன்…