மழை வேண்டும்!
ஊசி போல மின்னி மின்னி ஊர் செழிக்கப் பெய்யும் மழை காசு போல மின்னி மின்னி காடு செழிக்கப் பெய்யும் மழை பணம் போல மின்னி மின்னி பட்டண மெல்லாம் பெய்யும் மழை தேச மெல்லாம் செழித்திடவே செல்ல மழை பெய்ய வேண்டும் செல்ல மழை பெய்திடவே குளங்க ளெல்லாம் பெருக வேண்டும் பெருகி நின்ற குளங் களிலே பெருமை யோடு ஆட வேண்டும் – நாட்டுப்புறப் பாடல்