mazhai77

ஊசி போல மின்னி மின்னி

                ஊர் செழிக்கப் பெய்யும் மழை

காசு போல மின்னி மின்னி

                காடு செழிக்கப் பெய்யும் மழை

பணம் போல மின்னி மின்னி

                பட்டண மெல்லாம் பெய்யும் மழை

தேச மெல்லாம் செழித்திடவே

                செல்ல மழை பெய்ய வேண்டும்

செல்ல மழை பெய்திடவே

                குளங்க ளெல்லாம் பெருக வேண்டும்

பெருகி நின்ற குளங் களிலே

                பெருமை யோடு ஆட வேண்டும்

– நாட்டுப்புறப் பாடல்