(திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் நாணுத் துறவு உரைத்தல்   காதலர் தம்தம் காதல் மிகுதியை வெட்கம்விட்டு மொழிதல்   (01-07 தலைவன் சொல்லியவை) 1131 காமம் உழந்து வருந்தினார்(கு), ஏமம்,      மடல்அல்ல(து) இல்லை வலி.       “காதல் வெல்ல, மடல்குதிரை         ஏறுதல்தான் மிகநல்ல வழி”. நோனா உடம்பும், உயிரும் மடல்ஏறும்,       நாணினை நீக்கி நிறுத்து.       “காதல்துயர் பொறாத…