(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல்        அதிகாரம்    102. நாண் உடைமை    இழிசெயல் வழிவரும் அழியாப்  பழிக்கு வெட்கி,அது ஒழித்தல்.     கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்       நல்லவர் நாணுப் பிற.  பழிச்செயலுக்கு வெட்குவதே, வெட்கம்;         மகளிர்தம் வெட்கம், வேறு..   ஊண்,உடை, எச்சம், உயிர்க்(கு)எல்லாம் வே(று)அல்ல;       நாண்உடைமை மாந்தர் சிறப்பு. உணவு,உடை, பிறஎல்லாம் பொது; நாணம் மக்களுக்குச் சிறப்பு.   ஊனைக் குறித்த…