அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! – செயபாசுகரன்
தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள், கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர் காதுபடப் பாடினர். புட்பவனம், ஆனாரூனா அவர்களைப்பற்றி செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’ எனத்தொடங்கும் பாடலைத், தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின் இதயத் துடிப்பு கரைந்துவிட்டது. அப்பாடல் வருமாறு: அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை…
நா.அருணாசலம் நினைவேந்தல், திருவண்ணாமலை
ஐயா நா. அருணாசலம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி வைகாசி 29, 2047 / 11.06.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் சிற்றரங்கில் நடைபெறும். திரைப்பட இயக்குநர் – எழுத்தாளர் – கவிஞர் தோழர் இளவேனில், அருணாசலனாரின் மகன் சா.அ.சவுரிராசன், எழுத்தாளர் ம.மு.தமிழ்ச்செல்வன் முதலானோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். ஏற்பாடு : திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்.
அறவாணன் விருதுகள் வழங்கு விழா
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேரா.முனைவர் க.ப. அறவாணன் (பிறப்பு: ஆடி 25, 1972/ஆகத்து 9, 1941) தம் பிறந்த நாளில் ஆன்றோர்களையும் சான்றோர்களையும் விருது அளித்துப் பாராட்டி வருகிறார். இவ்வாண்டு, தமிழ்ச்செயல்தொண்டர் நா.அருணாசலம், முனைவர் இராம.இராமநாதன், முனைவர் வேலூர் ம.நாராயணன் ஆகிய சான்றோர்கள் விருதுகள் பெற்றுள்ளனர். விழாவின் பொழுது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் சில :-