உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைச் சிறையில் அடை !
உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை ! உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு ! தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும், உழவர் தற்கொலைகளைத் தடுக்கத் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 11.03.2047 / 24.03.2016 காலை, உழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. உழுபொறி எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில், பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய…
இந்துத்துவா வெறிச்செயலுக்கு வலுசேர்க்கும் நடிகர் கமலஃகாசன்
கருத்துரிமைக்கு எதிரான இந்துத்துவா வெறிச்செயலுக்கு வலுசேர்க்கும் கருத்தே, நடிகர் கமலஃகாசனின் கருத்து! தமிழ்க் கலை இலக்கியப்பேரவை பொதுச்செயலாளர் தோழர் நா. வைகறை அறிக்கை! “நான் தேசிய விருதைத் திருப்பித் தர மாட்டேன்; விருதுகளைத் திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிப்பதாய் அமையும்.விருதுகளைத் திருப்பித் தருவது என்பது ஒரு பயனற்ற செயல். விருதுகளைத் திருப்பித் தருவதால் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது” என்று 03.11.2015 அன்று, ஐதராபாத்தில் அளித்த தனது பேட்டியில் நடிகர் கமலஃகாசன் கூறியுள்ளார். இஃது ஒருவகையில் இந்துத்துவா மதவாத பா.ச.க. அரசுக்கு ஆதரவான கருத்தாகும். …