இவை தொடர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
இவை தொடர வேண்டா! கடந்த ஆட்சிகளில் காணப்பெறும் நிறைகளைப் பின்பற்றியும் குறைகளைக் களைந்தும் புதிய அரசு செயல்பட வேண்டும். அதற்குப் பின்வரும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி தேவை. ‘நான்’ என்னும் அகந்தை எண்ணம். எல்லாமே முதல்வரின் செயல்பாடு என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கல். காலில் விழும் ஒழுகலாறு. ஈழத்தமிழர்களை உரிமையுடன் வாழ விடாமை. அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அஞ்சுதல். ஊழற் செயல்பாடுகளுக்கு முதன்மை அளித்தல். 7.அமைச்சர்களே முதலமைச்சரைப் பார்க்க இயலாமை. முதல்வர் ஊடகங்களிலிருந்து விலகி நிற்றல். அமைச்சர்கள் தங்கள் துறை குறித்துக் கூறவும் வாய்ப்பூட்டு…