ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1251-1260)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1241-1250) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 126. நிறை அழிதல் (காமவேட்கையால் தன்னிலை இழந்து உரைத்தல்) நாணப்பூட்டு உள்ள நிறை என்னும் கதவைக் காமக்கோடரி உடைக்கிறது.(1251) என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஆள்கிறதே காமம்! (1252) காமம் மறைக்க இயலாமல் தும்மல்போல் வெளியாகிறதே!(1253) மன உறுதியை மீறிக் காமம் வெளிப்படுகிறதே (1254) பிரிந்தார் பின் செல்லா மான உணர்வை காமநோயர் அறியவில்லையே! (1255) நீங்கினார் பின் சேரச்செல்லும் காதல் எத்தகையதோ? (1256) விரும்பியவர் விரும்பியவற்றைச் செய்தால் நாணத்திற்கு…

திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை; 125. நெஞ்சொடு கிளத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை  3.  காமத்துப் பால்    15.   கற்பு இயல்    126.  நிறை அழிதல் மனத்துயரை அடக்க முடியாமல், தலைவி வாய்விட்டுப் புலம்புதல்.    (01-10 தலைவி சொல்லியவை) காமக் கணிச்சி உடைக்கும், நிறைஎன்னும்       நாணுத்தாழ் வீழ்த்த கதவு. நாணத்தாழ்ப்பாள் கொண்ட கற்புக்கதவைக், காதல்எனும் கோடரி உடைக்கும்.   காமம்என ஒன்றோ? கண்இன்(று),என் நெஞ்சத்தை,       யாமத்தும் ஆளும் தொழில். இரக்கம்இலாக் காதல், என்நெஞ்சை, நள்ளிரவிலும் அடக்கி…