தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்
தகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு தமிழுக்குக் குரல் கொடுக்கும் காந்தி தனித்து விடப்படலாமா? உலகில் உயர்தனிச்செம்மொழி என்பது தமிழ் மட்டும்தான்! தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பு வழங்கியதுடன் அதற்கு முன்னர், அதிகார ஆணையின்றியே அரசின் சலுகைகளைத் துய்த்து வந்த சமற்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதியேற்பை இந்திய அரசு அளித்தது. விழா நிகழ்ச்சிகளில் இனிப்பு வழங்கினால், “எனக்கு எனக்கு” என்று குழந்தைகள் ஆளாளுக்குக் கை நீட்டுவதுபோல் பிற மொழியினர் கை நீட்டியுள்ளனர். செம்மொழித் தகுதியேற்பு என்பது சிறுவர் சிறுமியருக்கு இனிப்பு வழங்குவது…
வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07
(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06 தொடர்ச்சி) வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) “எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன், வெள்ளைக்காரன் தப்பித்துக்கொள்கிறான். உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தனது…
இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் இரங்கத்தக்க ஊர்கள்! – வைகை அனிசு
இறப்பிற்குப் பின்னரும் தொடரும் ஊர் விலக்கக் கொடுமை தமிழகத்தில் உயிருடன் இருக்கின்றபோது இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தி அதன்மூலம் சாதித் தலைவர்கள் குளிர்காய்வது வழக்கம். அந்த வாக்கு வங்கியை பயன்படுத்தி அந்தத் தலைவர்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றுவார்கள் என்பது நடைமுறை உண்மை. ஆனால் இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தும் ஊர்கள் தமிழகத்தில் பல உள்ளன. இந்த இடஒதுக்கீடு சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கேட்பதுபோல் இல்லை. தங்கள் சொந்த சாதியினரிடையே இடஒதுக்கீடு கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. உயிருடன் இருக்கும்போது கல்வி,வேலைவாய்ப்பு, அரசுப்பணி அதற்காகப்…