தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம் – தமிழ்சிவா
தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம் பெரியாரே! பெரியாரே! நீங்களோ ஓயாமல் படித்தீர்கள் ஆளும் உங்கள் சீட சிகாமணிகளோ ஓயாமல் நடிக்கிறார்கள். இது எந்தச் சித்தாந்தில் வரும்? முன்னணி என்று பெயர் வைத்தவனெல்லாம் மானுட இனத்தையே பின்னணிக்கு இழுக்கின்றான் இங்கே நந்தினிகள் மீண்டும் மீண்டும் கூட்டு வல்லுறவில் கொல்லப்படுகிறார்கள் ஏலம் விடப்பட்ட நீதிதேவதை பணக்காரர்கள் வீட்டில் பற்றுப் பாத்திரம் தேய்த்து ஈட்டிய வருமானத்தில் வாழ்க்கைப்படி(சீவனாம்சம்) கேட்டு வழக்குத் தொடுத்தாள்bgupah தள்ளித் தள்ளி வைக்கப்பட்டதில் வயதாகிப்போனதால் முதியோர் உதவித்தொகை கேட்டும் கையூட்டில்லாமல் கிடைக்காத நிலையில் சிலபல ஆண்டுக்கு…
இசைப்பிரியாவிற்கு நீதி வேண்டி ஒன்றுகூடுவோம்!
இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா? இராமதாசு கண்டனம்!
தமிழர்களை மதிக்காதவர்களுக்குத் தேர்தலில் அடி கிடைக்கும் வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா என்று பாமக நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : – ”அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கேப்ரகடே தளையிடப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு எதிரடியாக, இந்தியாவில் அமெரிக்கத் தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் நயப்பு(சலுகை)களையும் மத்திய அரசு அதிரடியாக நீக்கியிருக்கிறது. வெளிநாட்டில்…