திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 003. நீத்தார் பெருமை
(002. வான்சிறப்பு தொடர்ச்சி) 001 அறத்துப் பால் 01 பாயிர இயல் அதிகாரம் 003. நீத்தார் பெருமை துறவியரது, சான்றோரது ஆற்றல்கள், அறவியல் பண்புகள், பெருமைகள். ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து வேண்டும், பனுவல் துணிவு. ஒழுக்கநெறி நின்று, துறந்தார்தம் பெருமையை நூல்கள் போற்றட்டும். துறந்தார் பெருமை துணைக்கூறின், வையத்(து), இறந்தாரை எண்ணிக்கொண்(டு) அற்று. துறந்தார் பெருமையை, உலகில் இறந்தாரை எண்ண இயலாது. இருமை வகைதெரிந்(து), ஈண்(டு)அ)றம் பூண்டார் பெருமை, பிறங்கிற்(று) உலகு. நல்லன,…