மா.பெ.பொ.கட்சியின் நாற்பெரு நிகழ்வுகள், சென்னை
தோழரீர் வணக்கம்! மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் தை 09, 10, 2047 / 2016 சனவரி 23-24 சனி-ஞாயிறு நாள்களில் சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமணக் கூடத்தில் “சிந்தனையாளன் பொங்கல் மலர் – 2016” வெளியீடு தமிழ்வழிக் கல்வி – இந்தி ஆதிக்க எதிர்ப்பு, நீராண்மை – வேளாண்மைப் பாதுகாப்பு மாநாடு, மது ஒழிப்பு மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒன்றுபட்டுப் போராடாமல் விடுதலை இல்லை. ஒன்றுபடுவோம் – போராடுவொம் – மாற்றுவோம் குடும்பத்தோடு வாருங்கள் ! திரளாக வாருங்கள்…