நான் கடலுக்கே போகிறேன்! – மாவீரன் மணிகண்டன்
அழைத்ததால் வந்தேன்! வழியடைத்துத் துரத்துகிறாயே! நெஞ்சுருகிக் குமுறியதால்தானே வந்தேன்! பஞ்சம் என்று கதறியதால்தானே வந்தேன்! கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன், உனக்காகக் கீழ் இறங்கினேன்! கொஞ்சமும் நினைவு இல்லையா? வஞ்சனை செய்கிறாயே… என்னை அழைத்து விட்டு…! வறண்ட என் நிலக் காதலி நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்…. சுரண்டி அவள் மேனியெல்லாம் பைஞ்சுதையாலே(சிமெண்டாலே) போர்த்தி வைத்தாய்! நனைத்து அணைப்பதாலே உடல் குளிர நலம் கொள்வாள்! அனைத்தும் மறுதலித்து, கடல் சேரவே வழி செய்தாய்! குளம் குட்டை ஏரியென அங்கங்கே தங்கியிருந்தேன்! வளம் கொழித்த அத்தனைக்கும் பங்கம்…
தேவதானப்பட்டிப் பகுதியில் நீர்நிலைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்
தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் மளமளவெனச் சரிந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் பருவமழையாகப் பொழிந்த கோடைமழையானது பல ஆண்டுகளுக்குப் பின்னர் பொழிந்ததால் அப்பகுதிகளில் உள்ள கிணறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பி வந்தன. இந்நிலையில் அளவுக்கு அதிகமாகப் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்தது. இருப்பினும் போதிய வாய்க்கால் அமைக்கப்படாதது, குளங்கள் கவர்வு(ஆக்கிரமிப்பு), குளத்தில் பரவலாக உள்ள கருவேல மரங்கள் இவற்றால் நீர்அதிக…
அழிக்கப்பட்டு வரும் நீர்நிலைக்கல்வெட்டுகள்
மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும் என ஆரூடம் கூறிக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நீர்ப் பேணுகை, நீர் மேலாண்மையில் முன்னோடியாகத் தமிழன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாகச் செப்பேடுகள், கல்வெட்டுகள் மிகுதியாக உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தண்ணீரின் இன்றியமையாமையை உணர்ந்து ஏரிகள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு ஏரிகள் உருவாக்கிய பின்னர் ஏரிகளில் உள்ள கல்வெட்டு ஆவணப் பொறிப்புகளையும், அரசர்களின் ஆணைகளையும் இன்றும் காணலாம். அரசனின் எந்த ஆணைப்படி அது அமையப்பெற்றது, அதைப் பேணுவதற்கு அளிக்கப்பட்ட கொடைகள், அந்த அரசனின் அரச முத்திரை ஆகியவை…
தனியார் பிடியில் இராணிமங்கம்மாள் உருவாக்கிய மத்துவார் குளம்
தேவதானப்பட்டி பகுதியில் இராணிமங்கம்மாள் காலத்தில் உருவாக்கப்பட்ட மத்துவார் குளம் கேட்பாரன்றிக் கிடக்கிறது. 1689 முதல் 1706 ஆம் ஆண்டு வரை சார்பரசியாக மதுரையை ஆண்டவர் இராணிமங்கம்மாள். அவர் காலத்தில் மதுரையிலிருந்து ஆவியூர், காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கும் திருச்சுழியலுக்கும் பெரியகுளத்திலிருந்து கெங்குவார்பட்டி வழியாக மதுரைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. அச்சாலைகள் இன்று வரை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது. இராணிமங்கம்மாள் காலத்தில் பல்வேறு குளங்கள், சத்திரங்கள், சாவடிகள், அன்னதான மண்டபங்கள் என ஏராளமாகக் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட குளங்களில் ஒன்று கெங்குவார்பட்டியில் உள்ள மத்துவார்குளம். இக்குளத்தை பொதுமக்களுக்காகக்…