நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் நேர்ச்சிகள்
நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் தொடரும் துயரநேர்ச்சிகள் தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் வண்டிமோதல்கள் தொடர்கின்றன. தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாக வைகை அணை, ஆண்டிபட்டி, தேனி போன்ற பகுதிகளுக்குச் செல்லலாம். மேலும் கன ஊர்திகள் பெரியகுளம் வழியாகத் தேனி சென்றால் 10 அயிரைக்கல்(கி.மீ.) தொலைவு கூடுதலாக இருக்கும். இதனால் பயணநேரம், எரிபொருள் செலவு, ஊர்திப் போக்குவரத்து இடையூறு ஏற்படும். இதனால் தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாகப் பல கன ஊர்திகள் செல்கின்றன. மேலும் ஆண்டிபட்டி, சின்னமனூர், தேவாரம் பகுதிகளில் காற்றாலை மூலம்…
தொடரும் சாலை நேர்ச்சி(விபத்து)கள் – அதிகாரிகள் பொருட்படுத்தாமை
தேனிப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலை நேர்ச்சிகள் தொடர்கதையாகி வருகின்றன. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து தேவதானப்பட்டி வரை இருவழி சாலை அமைக்கும் பணி முடியும் தறுவாயில் உள்ளது. அதனை ஒட்டியுள்ள சிற்றூர்களை இணைக்கும் சாலைகளைச் செப்பனிடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இருவழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் சாலை இப்படியே நீளும் என்ற எண்ணத்தில் அதிவேகத்துடன் வருகின்றனர். அப்போது புல்லக்காபட்டி பகுதியில் சாலை அமைக்கப்படாததால் ஒட்டுநர்கள் வேகத்தை…