பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள்
பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள் நாம் பேராசிரியர்போல் போராளியாகத் திகழாவிட்டாலும் உரிமையுள்ள தமிழ் மாந்தராகவாவது வாழ வேண்டுமல்லவா? அதற்குப் பேராசிரியரின் பின்வரும் அறிவுரை களை அவர் நமக்கு இட்ட கட்டளைகளாகக் கொண்டு ஒழுக வேண்டும்: மொழியைக்காத்தவர்விழியைக்காத்தவர்! மொழியைச்சிதைத்தவர்விழியைச்சிதைத்தவர்! மொழிக்கும்விழிக்கும்வேற்றுமைஇல்லை! மொழியே விழி விழியே மொழி என்று கிளர்ச்சி கொள்ளுங்கள். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று அறைகூவுங்கள். தமிழ்வாழ்க!தமிழ்வாழ்க! தமிழ்ஓங்குக!தமிழ்உயர்க! என்றுவாழ்த்துங்கள் தமிழில்எழுதுக!தமிழில்பேசுக! தமிழில்பெயரிடுக!தமிழில்பயில்க! என்றுமுழங்குங்கள். மொழிவாழ்வுக்குமுயற்சிசெய்யுங்கள்… உங்கள்முயற்சிவாழ்க! தமிழ்வாழ்ந்தால்தமிழர்வாழ்வர்! தமிழர்வாழ்ந்தால்தமிழ்நாடுவாழும்! தமிழ்வாழ்வேதமிழர்வாழ்வு! (தரவு : புலவர்மணி இரா.இளங்குமரன்: பக்கம் 37: செந்தமிழ்க்காவலர்சி.இலக்குவனார்)