பணியின்மையிலும் நேர்மையில் குன்றாத இலக்குவனார்
பணி இல்லாத பொழுதும் மனச் சான்றுக்கு ஏற்ப நேர்மையாய் வாழ்ந்த பேராசிரியரின் சால்பிற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம் (பத்தாம்வகுப்பு) வரைதான் பள்ளியில் நடத்தப் பட்டது. பேராசிரியர் வந்த பின்பு தான் பள்ளி இறுதி வகுப்பு எனப்படும் (ஆறாம்படிவ)பதினொன்றாம் வகுப்பிற்கான இசைவைப் பெற்றார். இதுவும் மக்கள் நலனையே நாடும் அவரது உயரிய பண்பைக் காட்டும். அப்பொழுது பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு அவர்களைச் சந்தித்துப் பள்ளிக்கு ஆறாம் படிவத்தின் (பதினொன்றாம்…