வைரத்தமிழர் க.தமிழமல்லன் வாழியவே!
உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு புதுச்சேரியில்தி.பி.2047, தைத்திங்கள்(சுறவத்திங்கள்) 2, 3 (16,17.01.2016)ஆகிய நாள்களில் வேல்.சொக்கநாதன் திருமணநிலையத்தில் நடைபெற்றது. அதில் முனைவர் க.தமிழமல்லனுக்கு வைரத்தமிழர் என்னும் விருது வழங்கப்பெற்றது. படத்தில் அவ்விருதை புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி முனைவர் க.தமிழமல்லனுக்கு வழங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. படத்தில் பாரிவேந்தர், இராதாகிருட்டிணன் நா.ம.உ,சேனாதிராசா, நா.ம.உ (இலங்கை)ஆகியோரும் இருக்கின்றனர்.
தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!
புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20…
தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா
தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார். தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது. திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார். சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார். ‘கற்பைப் போற்றிய…