முதலமைச்சர் கணிணித்தமிழ் விருதின் முதல் விருதாளர் தெய்வசுந்தரம்

பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரத்திற்கு முதலமைச்சர் கணிணித்தமிழ் விருது வழங்கப் பெற்றது!  முதலமைச்சர் கணினித்தமிழ் விருது (2013-14) வழங்கும் விழா புரட்டாசி 25, 2046 /  12-10-2015 திங்கள்கிழமை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருது வழங்கினார். இவ்விருது தோற்றுவிக்கப்பட்டதும் முதலாவதாக விருதினைப் பெறும் பெருமைக்குரியவர் பேரா.ந.தெய்வசுந்தரம். தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர், சமூகவளர்ச்சித்துறை அமைச்சர், செயலர், தமிழ்வளர்ச்சித்துறைச் செயலர், தமிழ்நாடு அரசு தலைமைச்செயலர், முதலமைச்சரின் அறிவுரைஞர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். ‘மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் ‘ என்ற தமிழ்க்கணியனை(மென்பொருளை) உருவாக்கியதற்காக…

கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு- மின்மடல் இழை

கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாம் மாநாடு (மார்ச்சு 30, மாநிலக்கல்லூரி, சென்னை) மின்மடல் இழை அன்புள்ள தமிழ் ஆர்வலர்களே, வரும் கணிணித்தமிழ் வளர்ச்சி இரண்டாவது மாநாட்டில் ‘ தமிழ்மொழித்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி’ என்பதே மையக் கருத்தாக அமைகிறது. எனவே மாநாட்டிற்குமுன்பே அதுபற்றி இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சிகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். தமிழகத்தில்மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் தமிழ்மொழித் தொழில்நுட்பத்தில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அவைபற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் இந்த மின்மடல் இழை தொடங்கப்படுகிறது. மொழித்தொழில்நுட்பம் ( Language Technology)  பேச்சுத்தொழில்நுட்பம் (Speech Technology) ஒளிவழி எழுத்துணர்த் தொழில்நுட்பம் (Optical…