(தோழர் தியாகு எழுதுகிறார் 70 தொடர்ச்சி) இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு (BASIC STRUCTURE OF THE INDIAN CONSTITUTION) என்றால் என்ன? பொ,ந.பி [EWS] தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய இரு நீதியரில் ஒருவரான இரவீந்திர பட்டு எழுதிய தீர்ப்புரையைத் தமிழாக்கம் செய்து வருகிறேன். அதன் மூன்று பகுதிகளைச் சட்டத் தெளிவு கருதியும் தமிழாக்கம் கருதியும் முன்பு தாழி மடல்களில் (37, 38, 40) பகிர்ந்திருந்தேன், இதோ இன்னும் சில பகுதிகள் (தமிழிலும் ஆங்கிலத்திலும்): [எம். நாகராசு வழக்குத் தீர்ப்பிலிருந்து சில எடுகோள்கள்:]…