பகுத்தறிவுத்  தன்மானப்   பெரியார்                     பகலவனே ! 1. மனுநூலை  நம்பவைத்து  மக்களையே             மடமைதனில்  ஆக்கி  வைத்த     மாண்பில்லா ஆரியத்தின் மடமைமுகத்          தோலுரித்த மாண்பின்  மிக்கோன் பனுவலெனும்  வேதத்தின் முடக்காற்றை           மணக்காதே  வைத்த  பெம்மான்      பிறப்பதனில் சாதிகண்டு  பரமனுச்சி                    அமர்ந்திருந்த  ஆரி  யத்தை நுனிநாவாம்  பகுத்தறிவின்  அம்பாலும்                     கோலாலும்  வென்ற  வீரன்       நற்றமிழத்  தன்மானம்  பகுத்தறிவால்              ஆரியத்தை விரட்டி  வைத்தோன் தனிச்சிறப்பார் பெரியாரே தமிழினத்தின்                        மூச்சுக்காற்  றாக  மாறித்   …