முழுமையாக முடங்கியது வட மாகாணம்
இலங்கை முழு அடைப்புப் போராட்டம் – முழுமையாக முடங்கியது வடக்கு மாகாணம் வவுனியாவில் மாணவி அரிசுணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடிய நிகழ்வுக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் பிப்ரவரி 24, 2016 அன்று முழுமையாக முடங்கியது. பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ் வணிகர் கழகம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள…
சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!
ஆந்திரரின் அளப்பரிய கொடுமை! வெங்கையாவிற்குக் கடும் கண்டனம்! சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்! கொடுங்கோல் கொலையாளி இராசபக்சேவை அழைத்து அழைத்து ஆந்திரர்களும் அவனின் மறு பதிப்பாக ஆகிவிட்டனர் போலும்! கூலி வேலைக்கு அழைத்து வந்த தமிழர்களைத் திட்டமிட்டுத் துன்புறுத்தி, உடலுறுப்புகளை வெட்டி, எரியூட்டி, குண்டுகளால் துளைத்துக் கொன்ற செய்தி ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனால், அப்பாவி மக்களைக் கொன்றோமே என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எப்படி இரக்க உணர்வு வரும்? திட்டமிட்ட படுகொலை என்னும் பொழுது அதைத்தானே சரி என்பார்கள்….
மாய்ப்பதுவா மதவேலை?- முனைவர் க.தமிழமல்லன்
மாய்ப்பதுவா மதவேலை? முனைவர் க.தமிழமல்லன் பாக்கித்தான் பெசாஅவரில் பள்ளிக்குள் சுட்டார்கள் பயனென்ன? நுாற்றுக்கும் மேல்குழந்தை உயிர்பறிப்பால்? ஆக்கித்தான் பார்க்கின்ற அரும்பணியில் இறங்காமல் அறியாத குழந்தைகளை அழித்ததனால் என்னபயன்? போக்குவதால் பல்லுயிரைப் புதுவளர்ச்சி மதம்பெறுமா? போர்க்களத்தில் காட்டாத பெருவீரம் பேதைமையே! நீக்குங்கள் வன்முறையை நிலையான நல்லன்பை நிலவுலகில் விதையுங்கள்! நிலைக்காது மதவெறிகள்! நல்வாழ்க்கை மக்களுக்கு நல்கத்தான் பன்மதங்கள், நாட்டோரை அச்சத்தால் நடுக்குவது மதப்பணியா? கொல்லாத நற்பரிவைக் கொடுப்பதுதான் நன்மதங்கள், கொலைக்களமாய்ப் பள்ளிகளைக் குலைப்பதுவா மதவேலை? பொல்லாத மதப்பிணியால் கொல்நெஞ்சம் ஆகாமல் புத்தன்பு நீர்கொண்டு புதுக்கிவிடல் மதமன்றோ?…