கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆடி 11, 2049 வெள்ளிக்கிழமை 27.07.2018 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , இலக்கியவீதி அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன் சிறப்புரை : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை : துரை இலட்சுமிபதி
செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
படத் தொழில் வளர
பாடுமிடம் தெரிந்து பாடவேண்டும் – ஆடுவோர் பாட்டின் பொருள் உணர்ந்து ஆட வேண்டும் – கவிஞன் (பாடும்) பாடும் படக் கலைக்கும் பாடுபட்டோர் தமக்கும் பலருக்கும் பலனளிக்கும் பக்குவ மிருக்கும்படி (பாடும்) கலைஞர்களைக் குழுவாய்க் கூட்ட வேண்டும் – முதலில் கதையமைப்பை விளக்கிக் காட்டவேண்டும் – அந்தக் கருத்தோ டிணைந்து கவிதீட்ட வேண்டும் – அதில் காலத்திற் கேற்ற சுவையூட்ட வேண்டும் – கவிஞன் (பாடும்) ஆடற்கலைக் கழகு உடலமைப்பு-இன்னும் அகத்தின் நிலை விளக்கும் முகக்குறிப்பு பாடற்கலைக் கழகு இசையமைப்பு – கலை பலருழைப்பால்…