சிறக்க வாழ்ந்திட ! – மெல்பேண் செயராமர்

சிறக்க வாழ்ந்திட !   மதுவைநீ நாடாதே மதிகெட்டுப் போய்விடுவாய் மங்கையரை நாடுவதால் வலியுனக்கு வந்துவிடும் சதிசெய்யும் குணமுடையார் சகவாசம் தனைவிடுத்தால் சரியான வழிநடக்கத் தானாகப் பழகிடுவாய் ! ஏழ்மைநிலை இருப்பாரை இரக்கமுடன் அணைத்துவிடு எதிரியென எவரையுமே என்றும்நீ எண்ணாதே சோதனைகள் வந்திடினும் சோர்ந்துவிடா திருந்துவிடின் சாதனையின் நாயகனாய்த் தலைநிமிர நின்றிடுவாய் ! அறத்தினைநினை அன்பையணை சிரத்தையுடன்நீ சிறந்தனதேர்ந்திடு இறப்பினைப்பற்றி எண்ணாதிருந்திடு சிறக்கவாழ்ந்திடச் சிந்தனைசெய்திடு ! அரக்கக்குணத்தை அடியோடழித்திடு உரக்கவுண்மையை வாழ்வினிலுரைத்திடு குறைக்குள்சென்றிடா மனத்தைத்தடுத்திடு சிறக்கவாழ்ந்திடச் சிந்தையைச் செலுத்திடு ! தாழ்வுமனப்பான்மையினைத் தானழித்துநில்லு வீழ்கின்றஎண்ணம்வரின்…

தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர்

தமிழர்கள் தம் பண்புகள் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர்   திராவிடர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும்.   மிகப் பழைய காலத்திலும் திராவிடர் நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தினால் திராவிடருக்கு உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்புபடுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாக விட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம்….