இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04 கழகப் புலவர்களும் பிறரும் இயற்றிய பாடல்களையே பிற்காலத்தார் பொருள் பற்றியும், பாவகை பற்றியும், அடிகள் பற்றியும் பல பிரிவுகளாகத் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவினுள் அடங்கியுள்ளன. எட்டுத்தொகை என்பதனுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை அடங்கும். பத்துப்பாட்டு என்பதனுள் திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,…