உ.வே.சா.வுக்கு முந்தைய பதிப்பாசிரியர்கள் 1992ஆம் ஆண்டு நாட்குறிப்பை புரட்டியபொழுது கிடைத்த தகவல் இது. ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழிலக்கியங்களை அச்சுச்சுவடிகளாக வெளியிட்டவர் உ.வே.சா.தான் என்றும் முதன்முதலில் வெளியிட்டவர் அவர்தான் என்றும் பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். அவர் மட்டும்தான் அம்முயற்சிக்கு மூலவரா என்னும் வினா 1992ஆம் ஆண்டில் எனக்குள் எழுந்திருக்கிறது, அதுபற்றி நூலகவியலாளர் வே.தில்லைநாயகத்திடம் கேட்டபொழுது, “இல்லை. உ..வே.சா. பிறப்பதற்கு முன்னரே தமிழிலக்கியங்கள் அச்சிடப்பட்டு இருக்கின்றன. உ.வே.சா. அதிகமான நூல்களை அச்சிட்டார்” எனக் கூறிவிட்டுத், தனது நினைவிலிருந்து அவர் கூறிய பதிப்பாசிரியர்களின் பட்டியல்தான் இது: ஆறுமுகநாவலர் 02….