தோழர் தியாகு எழுதுகிறார் 96 : பதிவுகள் தளத்தில் செவ்வி 3
(தோழர் தியாகு எழுதுகிறார் 95: பதிவுகள் தளத்தில் செவ்வி .1- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி3 தமிழ் மன்பதையைப் பொறுத்த வரைக்கும் – நமக்கிருக்கிற ஒரே சிக்கல் தில்லி அல்ல. அது சிக்கல்களில் ஒன்று. அரசியல் அதிகாரம் அங்கே இருப்பதனால் உடனடியான அரசியலில் அதை அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிக்கல் அத்தோடு முடிவதல்ல. நமக்கு இங்கே நமக்குள் இருக்கிற சிக்கல் முக்கியமானது. நமது தேசிய வளர்ச்சிக்கான தடைகள் – நமது தேசியச் சந்தை உருவாவதற்கான தடைகள் – குடிநாயக உறவுகளுக்கான தடைகள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 95 : பதிவுகள் தளத்தில் செவ்வி 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 94: பதிவுகள் தளத்தில் செவ்வி .1- தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 2 அப்படியான நிலை வரும் போது இந்தக் குறிப்பிட்ட வரையறைக்கு வெளியில் இருக்கிற அனைவருமே அன்னியர்களாகப் பாரக்கப்படுவார்கள். மற்றவர்கள் அல்லது அடையாளமற்றவர்கள் எனும் அளவிலேயே பார்க்கப்படுவார்கள். இவ்வாறான தருணங்களில் தனிநிலையை(‘எக்சுக்ளூசிவி’டியை)க் கோருவதால் மற்றவர்களையும் விளிம்புநிலையில் இருக்கிறவர்களையும் அழிக்கத் தேசியவாதிகள் நினைப்பார்கள். இன்றைய தேசியம் குறித்த உரையாடல்களில் இதை இனச்சுத்திகரிப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஈழத்திலும் முசுலீம் மக்களின் பாலான விலக்கம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகி வருகிறது….
தோழர் தியாகு எழுதுகிறார் 94 : பதிவுகள் தளத்தில் செவ்வி .1
(தோழர் தியாகு எழுதுகிறார் 93 : இறையூர் இழிவு – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 1 உங்களில் தோழர் யமுனா இராசேந்திரனைப் பற்றி அறியாதவர்கள் இருத்தல் அரிதே.2000ஆம் ஆண்டு நான் இலண்டன் சென்றிருந்த போது அவர்தாம் என்னை ஐகேட்டு கல்லறைக்கு(Highgate Cemetery) அழைத்துச் சென்று “இதோ உங்களவர், போய்க் கொஞ்சுங்கள்”என்று காரல் மார்க்குசிடம் கொண்டுபோய் விட்டு சுட்டுத் தள்ளியவர். 2003ஆம் ஆண்டு யமுனா சென்னை வந்திருந்த போது என்னிடம் ஒரு நீண்ட செவ்வி கண்டார். இனிய நண்பர் விசுவும் துணைக்…