பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல் இன்றுளோர்நாளை யிருப்பதுவும் பொய்யெனவே மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெல்லாம் (35) நீரிற்குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுன் பேரிற்கருணை வெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம் (63) அன்பையுருக்கி யறிவையதன் மேற்புகட்டித் துன்பவலைபாசத் தொடக்கறுப்ப தெக்காலம் (64) பல்லாயிரங் கோடிப் பகிரண்டமுன் படைப்பே அல்லாது வேறில்லையென் றறிவதுஇனி யெக்காலம் (154) சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம் (156) –  பத்திரகிரியார்