இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06 –  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06   தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.  கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது.  வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு…

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 – தி.வே. விசயலட்சுமி

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2        பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும்  செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல்  தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது.      தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…

தொல்காப்பியர் சிலை திறப்பு விழா , மூவர் படத்திறப்பு, காப்பிக்காடு

ஆனி 26,2047/ சூலை 10, 2016 காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை குமரி மாவட்டம் பனம்பாரனார் நிலம்தரு திருவில் பாண்டியன் அதங்கோட்டாசான் ஆகியோர் திருவுருவப்படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவை

நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம்

நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம்   புலவர் த.சுந்தரராசன் அறிவிப்பு   தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை அமைக்க உள்ளது. வரும் சித்திரை முதல் வாரம் இதற்கான விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தொல்காப்பியம் அரங்கேறிய அவையை – தமிழ்ச்சங்கத்தை – நடத்திய வேந்தர் நிலந்தரு திருவின் பாண்டியன் படமும், தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய புலவர் பனம்பாரனார் படமும் திறக்கப்பட வேண்டும் எனச் சிலையமைப்புக் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, தமிழன்பர்களும் ஓவியர்களும்…

தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே! – கி.வா.சகந்நாதன்

“தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள். பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து. தமிழ் என்ற பெயர் முதல்…