திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 020. பயன் இல சொல்லாமை
(அதிகாரம் 019. புறம் கூறாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை எதற்குமே பயன்படாத வீண்சொற்களை என்றுமே சொல்லாத நல்பண்பு. 191. பல்லார் முனியப், பயன்இல சொல்லுவான், எல்லாரும் எள்ளப் படும். வெறுப்பினை ஊட்டும் வீண்சொற்களைச் சொல்வாரை, எல்லாரும் இகழ்வார். 192. பயன்இல, பல்லார்முன் சொல்லல், நயன்இல, நட்டார்கண் செய்தலின் தீது. நண்பரிடம் விரும்பாதன செய்வதைவிட, வீண்சொல் கூறல் தீது. 193. நயன்இலன் என்பது சொல்லும், பயன்இல, பாரித்(து) உரைக்கும் உரை….