இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 9 : ஓரியின் புகழ்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 8 : தமிழ்நாட்டுக் கோட்டைகள் – தொடர்ச்சி) தமிழர் வீரம்ஓரியின் புகழ் படைத்திறமும் கொடைத்திறமும் வாய்ந்த வல்வில் ஓரியைப் பாராட்டிப் பாடினார், வன்பரணர். அவரது பாட்டின் சுவையறிந்து மகிழ்ந்தது பழந்தமிழ் உலகம். செஞ்சிக் கோட்டை திண்டிவனத்திற்கு மேற்கே உள்ளது செஞ்சிக் கோட்டை. அஃது இயற்கையான மலைக்கோட்டை. ஒன்றோடு ஒன்று இணைந்த மூன்று குன்றுகளால் அரண் செய்யப்பட்டுள்ள அக்கோட்டையின் சுற்றளவு ஏழு கல் என்பர். அவற்றுள் உயர்ந்தது இராசகிரி யென்னும் கொடுமுடி. செங்குத்தாக அறுநூறடி எழுந்து அண்ணாந்து நிற்பது அக்குன்றம்….
தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்
(தோழர் தியாகு எழுதுகிறார் : மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!-தொடர்ச்சி) பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும் இனிய அன்பர்களே! மதுரையைக் கதைக் களனாகக் கொண்டு, மா-இலெ தோழர்களை முதன்மைக் கதை மாந்தர்களாகக் கொண்டு, 1980களைக் கதைக் காலமாகக் கொண்டு அன்பர் சாம்ராசு படைத்துள்ள புதினம் கொடை மடம். இறுதியாகப் பெயர் கொடுப்பதற்கு முன்பே இந்தப் புதினத்தைச் சாம்ராசு எனக்குப் படிக்கத் தந்தார். அது சரியான அலைச்சல் நேரம் என்றாலும் சிலநாளில் படித்து முடித்தேன். எடுத்தால் கீழே வைக்க முடியாத இலக்கியச்…
ஒளவையார்:4 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:3 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 13 2. ஒளவையார் (தொடர்ச்சி) ஒளவையாரின் எண்ணம் நிறைவேறிவிட்டது. அதிகனது அஞ்சா மழவர் படை, ஆர்த்தெழுந்து காரியின் கடியரண்களையும் கடும்படையையும் கலக்கழியச் செய்தது. அரிமா அன்ன அதிகன் தலைமையில் வரிப் புலிகளெனப் பாய்ந்த மழவர் சேனைக்கு ஆற்றாது மான் கூட்டமாயின மலையமான் படைகள். அதிகமான் வீர முரசு கொட்டி, வாகை சூடி, வெற்றிக்கொடியை விண்ணுயரப் பிடித்தான்; அதனோடும் அமைந்தானில்லை அவன்; மலையமான் காரியின் கோவலூருக்குள் நுழைந்து அந்நகரையும் பாழாக்கினான். பொலிவு மிக்க அவ்வள்ளியோன்,…
தொல்தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தனித்துவச் சிறப்புகள்- ப. மருதநாயகம்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 4.
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- 4. ஆதிமந்தியார் இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும், ‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ’ என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர், ‘மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் ண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே’. (குறுந்தொகை-31) என்னும் பாடலை எடுத்தோதி, ‘இது காதலற் கெடுத்த…
புறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: பரணர் கேட்ட பரிசு
புறநானூற்றுச் சிறுகதைகள் 5. பரணர் கேட்ட பரிசு பரணர் அந்தச்செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய்யென்பதா? அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா! எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர். அப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும்? உண்மையில் அது சிறிது அருவருப்பை உண்டாக்கக்கூடிய செய்திதான்….
வெங்கதிர் நிலவும் வெள்நள் ஆறும் – உருத்ரா
சொல் காப்பியம் : அன்றும் இன்றும் “ஞெமலி மகிழ்தரு” என்ற சொல்லை ஆக்கி இச்செய்யுளை நான் எழுதியமைக்கு 01.12.2014 அன்று ஒரு நடு இரவில் படித்த “அகநானூற்றுப்பாடல்” (மணிமிடைபவளம்)தான் கரு. அதில் “மகிழ்” என்ற சொல் நாய் குரைத்தலை குறித்தது.கூரிய பற்களை உடைய நாய் “மகிழ”த் (குரைக்க) தொடங்கியதைப் புலவர் வெகு நுட்பத்துடன் எழுதியிருந்தார். அப்போது தான் என் ஐயம் கூட தீர்ந்தது.”கூரிய பற்கள் போல் இதழ்கள் கொண்ட பூவுக்கு “மகிழம்பூ” எனப் பெயர் ஏன் வந்தது என்று தெரிந்து கொண்டேன்.சொல் பூவிலிருந்து நாயின் பற்களுக்குத்…