சிலம்பப்போட்டிப் பரிசளிப்பு விழா
நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா
நன்னன் குடியின் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.என்.இராசரத்தினம் கலையரங்கில் ஆடி 14, 2050 / 30.7.2019 அன்று மாலைநடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக தலைவர் தளபதி மு.க.தாலின் ஆகியோர் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தனர் இவ்விழாவிற்கு வந்தவர்களை திருமதி வேண்மாள் கோவிந்தன் வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் மா.நன்னனின் ‘அகமும் புறமும்’ என்ற நூல் குறித்து வழக்குரைஞர் த.இராமலிங்கமும், ‘இவர் தாம் பெரியார்’ (வரலாறு -திராவிடர் கழ கத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள்…
இதழாளர் மகாதேவா நினைவுச் சிறுகதைப்போட்டி – பரிசளிப்பு விழா
ஆவணி 25, 2048 / ஞாயிறு / 10.09.2017 மாலை 5.30 இதழாளர் மகாதேவா ஐயா நினைவுப் பன்னாட்டுச் சிறுகதைப்போட்டி : பரிசளிப்பு விழா, திருச்சிராப்பள்ளி
நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா, சென்னை
ஆடி 15, 2047 / சூலை 30, 2016 சனி மாலை 6.00
வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா
வெள்ளவத்தையில் பரிசளிப்பு விழா வெள்ளவத்தை இராமகிருட்டிணா கல்விக்கூடத்தின் பரிசளிப்பு விழா அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குத் தலைமை விருந்தினர்களாகத் தேசிய இணைவாழ்வு – கலந்துரையாடல் – அரசவினை மொழிகள் அமைச்சர் மனோ.கணேசன், கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன், மேல் மாகாண அவை உறுப்பினர் சண். குகவரதன், இடைநிலைக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி த.இராசரத்தினம், கொழும்பு தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருவாட்டி சீ.கே.இலங்கதிலக முதலான பலர் கலந்து கொண்டார்கள். இத்துடன் மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை…
நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா-12
நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா-12 நன்னன் குடி நிகழ்த்திய நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா தி.என் இராசரத்தினம் கலையரங்கில் தி.பி. 2046 ஆடித் திங்கள் 14 ஆம் பக்கல் / சூலை 30, 2015 மாலை 6 மணிக்கு முனைவர் தெ. ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. புலவர் மா.நன்னன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 36 அகவையில் மரணம் அடைந்த தன் மகன் மரு. அண்ணலின் அறிவுக்கூர்மை பற்றி எடுத்துக் கூறினார் ‘தமிழைத் தமிழாக்குவோம்’ என்னும் தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற…
அ.வாடிப்பட்டியில் பரிசுகள் வழங்கும் விழா
விடுதலை நாளை முன்னிட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விடுதலை நாளை முன்னிட்டுப் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, நடனப்போட்டி முதலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி தலைமை தாங்கினார். ஒன்றியப்பெருந்தலைவர் செல்லமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளும் சுழற்கேடயங்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், முன்னாள் கெங்குவார்பட்டிப் பெருந்தலைவர் காட்டுராசா, தேவதானப்பட்டிமன்ற…
ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா
நன்னன் குடி நடத்திய நூல்கள் வெளியீட்டுடன் கூடிய ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா 2014 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30 ஆம் பக்கல் அன்று புலவர்.நன்னன் எழுதிய8 நூல்கள் வெளியீடும் மாணவர்களுக்கும் சாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கும்பரிசளிப்பு விழாவும் இனிதே நடந்தேறியது. நன்னன்குடிகடந்த11 ஆண்டுகளாகத் தொடர்ந்து இவ்விழாவை நடத்தி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்குக் கம்பன் கழகத் தலைவரும்எம் சி ஆர் கழகத்தலைவருமாகிய இராம.வீரப்பன் தலைமைத் தாங்கி நூல்களைவெளியிட்டு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். புலவர் நன்னன் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றும் விழாவின் நோக்கங்களைப் பற்றி…