குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?
குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா? கலி.பூங்குன்றன் மனுதருமத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் ‘நச்சு நச்சு’ என்று கொடுத்தார் சாட்டையடி! வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்ஞ்சியார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர்…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:3. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து (48) ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத, இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மை யுடையத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது. இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு வாழ்கின்றவர் பெரியவரா? இல்லறத்தை வெறுத்துத்…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (திருக்குறள் 45) இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்பும்=அன்பையும், அறன்=அறனையும், உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், பண்பும்=இல் வாழ்க்கைக்குரிய பண்பும், பயனும்=பயனுடைமையும், அது=அங்ஙனம் பெற்றிருத்தலாகும். அன்பு பரிமேலழகர், “தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:1. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2. வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) இல்வாழ்க்கை இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். ‘இல்லாள்’ என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். ‘இல்லான்’ என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே எனத் தமிழ்முன்னோர் கருதியுள்ளனர் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 2/7 இலக்குவனாரின் படைப்புகள் பற்றிய கட்டுரையாளர்கள் கருத்துகள் குறித்த சுருக்கப் பார்வை வருமாறு: பேராசிரியர் சி.இலக்குவனார் தேவையான இடங்களில் பரிமேலழகர் உரையை மறுத்துத் தமிழ் மரபை முன்னிறுத்தி உரை கூறுகிறார் என முனைவர் பி.தட்சிணாமூர்த்தி ‘மூன்றும் ஐந்தும்’ என்னும் கட்டுரை மூலம் விளக்குகிறார். “பேரா.இலக்குவனார் ‘பழந்தமிழ்‘ நூலில்…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 இந்தியாவில் உள்ள மொழிகள் தமிழாயினும் வங்காளமாயினும் மராத்தியாயினும் பஞ்சாபியாயினும் அனைத்துமே இந்திய நாட்டு மொழிகள்தாம். இம்மொழிகள் அனைத்துமே ஒரு செடியில் பூத்த பல மலர்களே. இவை அனைத்தும் மொழிகளின் அரசியும் கடவுள்களின் மொழியுமாகிய சமற்கிருதத்திலிருந்து பிறந்தவையே! வளமையையும் தூயத் தன்மையையும் கொண்ட அது இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கவல்ல பொது ஊடகமாகும். சமற்கிருதத்தைக் கற்பது கடினமன்று. இன்றைய நிலையில் சமற்கிருதம் இந்திய…
திருவள்ளுவரா வைத்தார், ஒரு பெயரில் ஈர் அதிகாரம்! – தமிழரசி
திருவள்ளுவரா வைத்தார்? ஒரு பெயரில் ஈர் அதிகாரம்! திருக்குறள் முழுவதையும் எப்போது படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்குத் திருவள்ளுவர் வைத்திருப்பாரா! என எண்ணிப் பார்க்கும்போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டித் குறுகத் தறித்த குறள்” எனப் புகழப்பட்ட திருக்குறளில் ஒரே பெயரில் ஈர் அதிகாரம் எப்படி வந்தது? அதுவும் “குறிப்பு அறிதல்” என்னும் பெயரில் இருப்பது இன்னும் வியப்பைத் தருகிறது. எளியோரான…
மக்கள் தந்தைக்குச் செய்யும்கடன், புரோகிதர்களுக்குப் பொன்னும் பொருளும் அளிப்பதல்ல – சி.இலக்குவனார்
மக்கள் தந்தைக்குச் செய்யும்கடன், புரோகிதர்களுக்குப் பொன்னும் பொருளும் அளிப்பதல்ல! மக்கட்பேறு எற்றுக்கு என்ற வினாவுக்கு விடையாகப் பரிமேலழகர் கூறுகின்றார் : “புதல்வரைப் பெறுதல், அஃதாவது இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும் தேவர் கடன் வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லாது இறுக்கப்படாமையின், அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறுதல். ஆகவே, மக்களின் கடன் தென்புலத்தார்க்குக் கடன் செலுத்துதல் ஆகும் என்று நம்பி வந்தனர் என்று தெரிகின்றது. தென்புலத்தார் என்பவர் பிதிரர் ஆவார். படைப்புக்…
பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்! – ஞா.தேவநேயன்
பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும் இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழக ருரையே தலை சிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய…
பல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் – இரா.நெடுஞ்செழியன்
பல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் என்றாலும், மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயம் பற்றும், வருணாச்சிரம சனாதன தருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும் உண்மை. மேற்கண்ட காரணம் பற்றித்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தம்(பிள்ளை) அவர்கள், “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர‘ வேண்டும் என்று வலியுறுத்தினார்: அவர்…
பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது! – இரா.நெடுஞ்செழியன்
பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது பரிமேலழகர் தமிழ்மொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும், வடமொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும் ஐயந்திரிபு அறமுற்றும் தெளிவுறக் கற்றறிந்தவர் என்பதை, அவரது உரையின் வளத்தால் நன்கு அறிந்து கொள்ளலாம். அவர், தமது உரையில் 230க்கும் மேற்பட்ட இலக்கிய இலக்கணச் செய்யுள்களை மேற்கோள்களாகக் காட்டுகிறார் என்றால், அவரது தமிழ் இலக்கிய இலக்கணப் புலமை, தெளிவாக உணரப்படும். ஒவ்வொரு குறளுரையிலும் அவர், இலக்கண அமைதியைச் செம்மையுக் கூறிச் செல்லும் பாங்கு தனிச் சிறப்புடையதாகும். – நாவலர் இரா.நெடுஞ்செழியன்: திருக்குறள் தெளிவுரை: முன்னுரை
நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள்
நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின் தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும் ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம் திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பல் பரிபாடல் – உரைச்சிறப்புப் பாயிரம் : பரிமேலழகர்