தன்னையே பலியிடும் நவகண்டச் சிற்பங்கள் – வைகை அனீசு
தன்னையே பலியிடும் நவகண்டச் சிற்பங்கள் தனக்கென வாழாப் பிறர்க்குரிய சமூகம் பண்டைய காலத்தில் போற்றுதலுக்குரிய நிலையில் இருந்துள்ளது. தெய்வத்திற்கோ தலைவனுக்கோ ஊருக்கோ தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் வீரனை மக்கள் வழிபடுகின்றனர். இப்பொழுதுகூட உயிரைக் கொடுத்த இறைவனுக்கு மயிரைக் கொடுக்கும் வழக்கம் அனைத்துச் சமயங்களிலும் காணப்படுகிறது. இந்துக்களாக இருந்தால் கோயில்களிலும், முசுலிம்களாக இருந்தால் நாகூர், ஏர்வாடி முதலான அடக்கத்தலங்களிலும் கிறித்தவர்களாக இருந்தால் வேளாங்கண்ணி முதலான கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்துவதைக் காணமுடிகிறது. வழக்கமாகப் பூசை செய்யும் இறைவனுக்கு எச்சில்உணவு வழங்கிய திண்ணப்பன் என்ற கண்ணப்பனைச் சிவனும் விழைந்துள்ளார்….