ஒரே இடத்தில் பல்வேறு பயிர்த்தொழில் செய்து வரும் உழவர்கள்
தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் ஒரே நிலத்தில் பல்வேறு பயிரிடுதலில் கவனம் செலுத்தி வருகின்றனர். தேனிப் பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவிற்குரிய வேளாண்பகுதி நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. இந்நிலையில் கிடைக்கின்ற நீரை வைத்துக் கரும்பு, தக்காளி, முட்டைக்கோசு எனப் பல்வேறு பயிரிடுகையை ஒரே இடத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்பாக உழவர்களிடம் கேட்டபோது, “மழை கடந்த இரண்டு வருடகாலமாக சரிவரப் பெய்யவில்லை. இதனால் நெல் முடிந்த பின்பு வாழை அதன் பின்னர் கரும்பு…