பறக்கத் துணிந்தவர்க்கு இறகுகள் பாரமில்லை சிறக்கத் துணிந்தவர்க்கு சிறகுகள் தேவையில்லை இறக்கத் துணிந்தவர்க்கு மரணமொரு அச்சமில்லை துற‌க்கத் துணிந்தவர்க்குத் துணியுமொரு மானமில்லை மறக்கத் துணிந்தவருக்குப் தோல்வியொரு துக்கமில்லை நடக்கத் துணிந்தவர்க்குப் பாதையொரு தூரமில்லை அடக்கத் துணிந்தவர்க்குக் காமமொரு கடினமில்லை மடக்கத் துணிந்தவர்க்கு நாவுமொரு நீளமில்லை படிக்கத் துணிந்தவர்க்கு வறுமையொரு விலக்கில்லை முடிக்கத் துணிந்தவர்க்கு யுத்தமொரு சத்தமில்லை அகழத் துணிந்தவனுக்கு அடர்பாறையொரு தடையில்லை பழகத் துணிந்தவனுக்கு மொழியுமொரு தடங்கலில்லை கொடுக்கத் துணிந்தவனுக்கு பொருளொரு குறையில்லை தடுக்கத் துணிந்தவனுக்குப் புனலுமொரு பொருட்டில்லை வாழ்த்தத் துணிந்தவனுக்கு வார்த்தையொரு பஞ்சமில்லை…