இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 21

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 20 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ துளு: திருந்திய தமிழ்க் குடும்ப மொழிகளுள் துளுவும் ஒன்று. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தில், கவின் மலையாளமும் துளுவும் என இடம்பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளது. குடகு என்னும் மொழியை ஒத்துக் கன்னடத்தினின்றும் சிறிதும், மலையாளத்தினின்றும் பெரிதும் வேறுபட்டுள்ளது. தமிழ்ச்சொற்கள் பலவற்றை அப்படியே கொண்டிருப்பினும் பல சொற்களை உருமாற்றியே வழங்குகின்றது. இதற்குத் தனி எழுத்தோ பழைய இலக்கியச் சிறப்போ இல்லை. கிருத்துவத் தொண்டர் குழாம் கன்னட எழுத்திலும் துளுவப் பார்ப்பனர் மலையாள எழுத்திலும் இம் மொழியை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 20

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 19 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி    தமிழிலிருந்து தோன்றியது மலையாளம் என்ற உண்மை கிழக்குத் திசையை உணர்த்த அது (மலையாளம்) ஆளும் சொல்லினாலேயே (படி ஞாயிறு) விளக்கப்பெறும். 1   தமிழிலிருந்து பிறந்த மலையாளம் வேறுபட்டதற்குரிய காரணங்கள் : 2         1.  சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால்    தடுக்கப்பட்டுத் தமிழ்நாட்டுப் பகுதியுடன்    மிகுதியான தொடர்பு கொள்ளாதிருந்தமை.         2. 12ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம்  நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை.        …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 19

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி. 1650) துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள (தமிழ்) மொழிக்கு ஆரிய மொழியை ஒட்டி எழுத்து முறைகளையும் இலக்கண விதிகளையும் அமைத்துவிட்டார். பின்னர்த் தமிழின் தொடர்பு குறைந்து ஆரியமொழித் தொடர்பு மிகுந்து தமிழுக்கு அயல்மொழியாக வளரத்  தலைப்பட்டு விட்டது. மொழிக்குரியோரும் தம்மை ஆரியர்களோடு தொடர்பு படுத்திக்கொள்ள விரும்பினரே யன்றித் தமிழருடன் உறவு முறைமை பாராட்ட விரும்பினாரிலர். தம் மொழியை ஆரியத்தின் புதல்வி என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்தனர்….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி  ஆரியம் ஆங்காங்குச் செல்வாக்குப் பெற்றது. அதன் வழியில் பிற மொழிகள் எல்லாம் இயங்கத் தொடங்கின. பழந்தமிழைக் கண்டு தன் எழுத்துகளை அமைத்துக்கொண்ட ஆரியத்தின் புது அமைப்பு முறையைப் பின்பற்றித் தம் எழுத்து முறைகளை அமைத்துக் கொண்டன.  ஆரிய மொழிச் சொற்களை மிகுதியாகக் கடன் பெற்று ஆரிய மொழியின் துணையின்றித் தாம் வாழ முடியாத நிலைக்கு  ஆளாகிவிட்டன. ஆதலின் தம் தாயாம் தமிழிலிருந்து புதல்விகளாம் பிற திராவிட மொழிகள் வேறுபட்டன போல்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி   இவ்வாறே படர்க்கை ஒன்றன்பால், பலவின்பால், தன்மை, முன்னிலை விகுதிகளும் தமிழ்க் குடும்ப மொழிகள் அனைத்திலும் ஒரே வகையாக அமைந்துள்ளமையைக் காணலாம். விரிக்கின் பெருகுமாகையால் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதை விடுத்து இனி எண்ணுப் பெயர்களை நோக்குவோம்.   தமிழ்                      மலையாளம்        கன்னடம்   தெலுங்கு  ஒன்று                      ஒன்னு                      ஒந்து                         ஒகட்டி  இரண்டு     ரண்டு                      எரடு              இரடு  மூன்று                   …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 16

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி வேற்றுமை   திராவிட மொழிகளில் எல்லாம் வேற்றுமைகள் எட்டெனவே கொள்ளப்பட்டுள்ளன. வேற்றுமைகளை அறிவிக்கும் உருபுகள் பெயர்க்குப் பின்னால் பெயருடன் சேர்ந்து வருகின்றன. இவ் வுருபுகள் தொடக்கத்தில் பின் இணைத் துணைப் பெயர்ச் சொற்களாக இருந்து நாளடைவில் தனித்தியங்கும் இயல்பு கெட்டு இடைச்சொற்கள் நிலையை அடைந்து விட்டன என்று அறிஞர் காலுடுவல் கருதுகின்றார். இந் நிலை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே ஏற்பட்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் அவை வேற்றுமையுணர்த்தும் உருபுகளாகவே கருதப்பட்டு இடைச்சொற்களாகவே…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 15

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  5. பழந்தமிழ்ப் புதல்விகள் பல்லுயிரும் பலவுலகும் படைத் தளித்துத் துடைக்கினுமோர்   எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும்   உன் உதரத்து  உதித்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாவுன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. எனும் தமிழ்த்தாய் வாழ்த்தில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்மொழி பல மொழிகட்குத் தாயாயுள்ள செய்தியை இனிமையுற எடுத்து மொழிந்துள்ளார்கள்.   இன்று திராவிட மொழிகள்…