(அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் தொடர்ச்சி) 02. பொருள் பால்     11. நட்பு இயல். அதிகாரம் 081. பழைமை பற்பல ஆண்டுகளாய்த் தொடரும்  பழம்நட்பின் சிறப்புஉரிமை, பெருமை.   பழைமை எனப்படுவ(து) யா(து)?எனின், யாதும்    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.        எதனாலும் கீழ்மைப்படா நட்புஉரிமை          பெற்ற நட்பே, பழைமை.       நட்பிற்(கு) உறுப்புக் கெழுதகைமை; மற்(று)அதற்(கு)      உப்(பு)ஆதல், சான்றோர் கடன்.          உப்புபோல், அமையும் உரிமைச்        செயல்தான் நட்பிற்கு உறுப்பு. பழகிய நட்(பு)எவன்…