கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 5& 6

திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 5& 6 ஐந்தாம் பாசுரம் தமிழ்மொழி மூலமறியா இறைபோல ! தானுணரா, பேசும் தமிழ்க்கூட்டம் தானுணரா வானுணரா, வையம் உணரா, தமிழவளை ஈன்றவர்தாம் யாரென்றும், என்றுயிர்த்தாள் என்றும், ஊன்றியா ராய்ந்தும் உணர்ந்தறியாத் தன்மையளாய்த், தோன்றறியா ஞானியாய்த் தோன்றும் இறையொப்ப, ஆன்ற பெருங்குழாத்திற் கன்னையளாய்ப், பன்மொழிகள் ஈன்றவளாய், நேரிலளாய், இன்பம் தருவாளின் கோன்மை இசைத்திடவா கோதையே, எம்பாவாய் ! ஆறாம் பாசுரம் தமிழின் பெருஞ்சிறப்பு ‘ ழ ‘ ழகரத் திருவெழுத்து ஏழிசைக்கு நேராய் ; நிகராய்ப் பிறமொழியில் நின்றிழைதல் காணார் ;…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 3 & 4

(திருத்தமிழ்ப்பாவை – பாசுரங்கள் 1 & 2 :தொடர்ச்சி)   திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 3&4    மூன்றாம் பாசுரம் தமிழின் உடலும் உயிரும் ஓங்கு பெருஞ்சக்தி உள்ளுறை அங்கமெனத் தாங்கும் இருநூற்று நான்பத்தின் ஏழெழுத்து; தூங்காப் புலன்மிக்கார் சூத்திரமாய்ச் செய்தவுயிர்; மூங்கில் குழலோசை மேவுகிற செம்மொழியாள்! நீங்கா இயற்கைபோல் நீணிலத்தில் வாழும்தாய்! ஈங்கவள் நல்லருளை ஏற்பதற்கு வான்மீது வீங்கொளியன் ஏகுமுன், நாம்விரைவோம்; ஆங்காலம் தூங்காது வம்மின் தொடியணிந்தே, எம்பாவாய்! நான்காம் பாசுரம் சங்கம் வளர்த்த மொழி வில்லார், புலியார், கயலார் முடிவேந்தர் வெல்வார் செருக்களத்து…

‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : வேணு குணசேகரன்

(திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் தொடர்ச்சி) ‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : முதல் பாசுரம் அச்செல்வி பற்றி அணிந்துரையான் செய்வேன் காண்! உச்சித் தலைமுதலாய் உள்ளங்கால் மட்டுமெழில் மெச்சி வியக்குமொரு மாண்புடைய மூதாட்டி; இச்சையுற வைக்கும் இளங்கன்னி; விண்ணுலகத் தச்சன்மயன் செய்த சிலையாள்; விழிமயங்கும் பச்சைவயல்; செங்கரும்புப் பால்சுவையாள்; சொல்லினியாள்! நச்சினார் ஏத்தும் ‘திருத்தமிழ்ப் பாவை’யினை மெச்சிப் புகழ்பாடக் கண்திறவாய், எம்பாவாய்! இரண்டாம் பாசுரம் அண்டம்சூழ் அன்னைத்தமிழ் உலகுவப்ப, ஓர்நிரைச்சொல் ஒண்டமிழ்ப்பேர் பூண்டு, நிலவுவெளி அண்டம் நிரப்ப,ஊற்…

திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் – வேணு குணசேகரன்

திருத்தமிழ்ப்பாவை தமிழ்த்தாயின் கட்டளை ஏற்றுத் ‘ திருத்தமிழ்ப்பாவை’ பாடினேன் கவிஞர் வேணு குணசேகரன் தமிழ்த்தாய் தைத்திங்கள் பிறக்குமுன் எமக்கொரு கட்டளை இட்டாள். அந்தக் கட்டளையை எம்மால் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு எமது சிற்றறிவே காரணம்.  மார்கழியில் வைணவர்கள் திருப்பாவையையும், சைவர்கள் திருவெம்பாவையையும் ஓதி மகிழ்வதுபோலத் தமிழ்த்தாயும் தமக்கென ஒன்றைச் செய்யுமாறு பணித்திருக்கும் அந்த நுண்ணிய கட்டளையை அவளருளாலே பின்னர்ப் புரிந்து கொண்டேன். ஆயின் அது எம்மால் இயலுமா என்று கொஞ்சம்கூடச் சிந்திக்கவில்லை.   மாறாகத், திருப்பாவை, திருவெம்பாவைப் பாசுரங்களைப்போல, அவள்…