மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே (தொல்காப்பியர், தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11) எனத் தொல்காப்பியர், துன்பம் போக்கும் உவகைகளில் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்…
மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!
மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்! உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார். இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே! (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல! முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும். அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும் …
தமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் தொன்மையான, சிறப்பான வரலாற்றுக்கு உரியவர்களாக இருந்தும் அவ்வரலாற்றை அறியாதவர்களாக வாழ்ந்து மடிவோர் யாரெனில் உலகிலேயே தமிழ் மக்களாக மட்டும்தான் இருக்க முடியும். நம் வரலாறு குறித்த அறிந்துணர்வு இல்லாததால்தான், மக்கள் நலன் குறித்த விழிப்புணர்வே நம் நாட்டவரிடம் இல்லை. நம் பாடங்களும் நம் வரலாறு தெரியாதவர்களாகவே நம்மை உருவாக்குகின்றன. எனவே, இப்பாடங்களின் அடிப்படையில் தேர்வுகள் எழுதி உயர் பொறுப்புகளுக்கு வருபவர்களுக்கும் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, முதலான…
மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! – செந்தமிழன் மணியரசன்
மாசி 02, 2047 / பிப்.14, 2016 காலை 10.00 சென்னை மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! வேளாண்மை, வீடு கட்டுதல், மருத்துவம் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளை மரபுவழியில் மேற்கொள்ளத் தேவையான பயிற்சிகளைத் தொடங்குகிறோம். இம்மூன்று துறைகளுக்குமான பாடத் திட்டம் இதுதான். மரபு வேளாண்மை: பாடம் 1 • இயற்கையியல் எனும் அடித்தளத்தை அறிந்துகொள்ளுதல்: புவியின் உயிர் வகைகள் – தாவரங்களின் இயல்புகள் – மனிதர்களும் தாவரங்களும் – காடுகளும் மனித வாழ்வும் – தாவரங்களும் கூட்டு உயிரிகளின் இயல்புகளும் பாடம் 2 • ஐம்பூதக்…